புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியே...

புலிகள் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்கிற பிரச்சாரங்களும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் ராணுவத்தின் வெற்றிகளும் பல சிங்கள இனவாதிகளைக் களிப்படையச் செய்திருக்கிறது. தமிழர்கள் இந்த நாட்டின் வந்தேறு குடிகள் என்கிற பிரச்சாரம் தென்னிலங்கையில் மீளவும் உயிர்த் துடிப்போடு முடுக்கி விடப் பட்டுள்ளது. இது பவுத்த சிங்கள நாடு தமிழர்கள் தமிழீழம் என்ற ஒரு நாட்டை உருவாக்க விடமாட்டோம்...தமிழர்களுக்கு இங்கு உரிமையிலையென்றால் அவர்கள் இந்தியாவுக்குச் செல்லடும் என்று 81 இலும் தமிழரை ஒருவர் விடாமல் கொல்லுங்கள் என்று 1983 இலும் சொன்ன சிங்கள மண்ணின் மைந்தர்கள் இப்போது வேகம் கொண்டு எழுகின்றனர்.

கருணா பிரிந்த போது ஒரு சிங்கள பத்திரிகை நண்பர் கேட்டார்... இனிமேல் உங்களின் தமிழீழக் கனவு அவ்வளவுதான் இனி என்ன செய்யப் போகிறார்கள் புலிகள் என்று. அவர் ஒரு இனவாதம் கக்கும் சிங்களவர் அல்ல இருப்பினும் அவரின் சிங்கள மனம் அந்த இடத்தில் புலிகள் பலவீனப் படுவது கண்டு சந்தோசம் கொண்டது. இன்றும் புலிகள் தோற்கிறார்கள் என்று அவர்களின் மனங்கள் சந்தோசம் கொள்கிறன.

ஆனால் புலிகளின் தோல்வி தமிழரை சந்தோசம் கொள்ள வைக்காது ஏனெனில் இன்று தமிழனின் பலம் ,தமிழனின் அடையாளம், தமிழனின் உரிமையினை வென்றெடுக்கும் சக்தி எல்லாம் தவிர்க்க முடியாபடி புலிகள் வசமாகிவிட்டன.ஆக புலிகளின் வீழ்ச்சியில் இருந்து ஒரு மாற்று சக்தி உருவாகிவிடும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு மக்கள் சக்தி வெடித்துக் கிளம்பி தமது உரிமையை வென்றெடுப்பதற்க்கு இலங்கைத் தமிழர்கள் அல்ஜீரியர்கள் போல் அரசியல் போர்க்குணத்தோடு முழுமையாக இல்லை என்பதும் மறுக்கவியலாத உண்மை.

இந்த லட்சணத்தில் வெளிநாடுகளின் இருந்து கொண்டு இணையத்திலும் மதுக்கடைகளிலும் எழுத்துப் புரட்சியில் தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றும்?! போராளித் தோழர்கள் புலிகள் தோற்கிறார்கள். என்று எக்காளமிடுகிறார்கள். புலிகளைப் புனிதவான்களாக நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் மீது எமக்கு விமர்சனம் உண்டு. ஆனால் புலிகளின் தோல்வியில் சந்தோசமடைவது இயலாமல் இருக்கிறது. அப்படி சந்தோசம் கொள்பவர்களின் செயல் சுயலாபமும் துரோகமும் நிறைந்ததுதான்.

நிலாந்தன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது அதுதான் இந்தக் கணத்தில் சொல்ல வேண்டியது. "புலிகளின் வெற்றியென்பது தமிழர்களுடைய வெற்றியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் புலிகளின் தோல்வியென்பது உலகம் முழுவதிலும் உள்ள தமிழனின் தோல்வி".ஆகவே புலிகளைத் தோற்கவிட முடியாது அந்த தோல்வியில் சந்தோசம் கொள்ள முடியாது. புலிகள் தோற்க்கும் ஒவ்வோரு கணமும் உலகம் முழுவதிலும் உள்ள 8 கோடி தமிழனையும் அது வந்து தாக்கும்

புலிகள் வெற்றியைப் பெற்ற பிறகு நாம் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து சில போரட்டங்கள் நடத்தி முழுமையான மானுட விடுதலைக்கும் உரிமைக்கும் வழியமைக்க வேண்டி வரலாம், அதுவரை புலிகளின் அந்த வெற்றியை நாம் கொண்டா முடியாதும் போகலாம். ஆனால் புலிகள் தோற்க்கும் ஒவ்வொரு கணமும் தமிழன் தோற்றுக் கொண்டே இருகிறான். எங்கோ எத்தியோப்பியாவில் இருகும் தமிழனுக்கு கூட அந்த பாதிப்பு பரிசளிக்கப் படும்.புலிகள் என்ற பலமிக்க சக்தி இருக்கும் போதே எதையும் வழங்கத் தயாரில்லாத சிங்கள அரசின் நிரந்தர அடிமைகளாகத் தமிழர்கள் மாற வேண்டியதுதான்.

இன்று புலிகளை விட்டால் அவர்களுக்கு எதிர் நிலையில் இருக்கிறவர்கள் புலிகளை வன்முறையாளர் என்று கூறிக் கொண்டே தாங்கள் பெரும் வன்முறையாளகளாக இருகிறார்கள்.புலிகள் ஒழிந்தார்கள் என்று சொல்லும் இவர்களா நாளை தமிழனுக்காக போராடுவார்கள்?

மடிந்து கொண்டிருக்கும் வன்னி மக்களின் போராளிகளின் அழிவுகளையும் தினம் தினம் வந்து சேரும் சோகச் சேதிகளையும் ஒரு கிறிகெற் ஸ்கோர் போலக்
கேட்டுவிட்டு விமர்சனம் வைப்பவர்களே... அஜீரியர்களிபோல நாமும் போர்குணம் பெற்று, எம்மக்கள் வலிகண்டு சும்மாயிராமால் மீண்டும் ஒரு அமைதி காணா அணி திரள்வோம்.