இலங்கை இனப்பிரச்சனை- தீர்வுத்திட்டப் போட்டி

இலங்கையின் பல்லாண்டுகால இனப்பிரச்சனைக்கு தீர்வுத்திட்டங்கள் சமர்ப்பிக்கும் பரபரப்பான போட்டி ஒன்று அறிவிக்கப்படுகிது.தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கையில் இத்தகைய தீர்வுத்திட்டப் போட்டி நடைபெற்று வந்த சூழலில் வலப்பதிபவர்களுக்கும் இது போன்ற ஒரு போட்டி நடத்த வேண்டும் என எண்ணினோம்.

தீர்வுத்திட்டங்களை இலங்கைஇல் பல்வேறு அமைப்புக்களும் அரசிடம் சமர்பிது வருகின்ற நிலைஇல் நமக்கும் இந்த சந்தர்ப்பம் தரப்பட வேண்டுமென்று எமது வலைபதிவர்களுக்கும் ஆசை இருப்பதில் என்ன தவறு இருக்கிறது.

நீங்கள் அனுப்பும் தீர்வுத்திட்டத்தில் இருந்து தேர்வாகும் முத்ல் 3 திட்டங்கள் சமாதானத்தினை வரவழைக்கும் பொருட்டு நடவடிக்கை எடுபவர்களிடம் அனுப்பி வைக்கப் படும்.


உதாரணத்துக்கு சில:

மத்தீல கூட்டாச்சி மாநிலத்தில சுசாட்டி
மாகாணசபை ஆட்சி(கிழக்குக்கு தனிஆவும் இருக்கலாம் )
மாவட்ட சபை ஆட்சி
ஊராட்சி சபை ஆட்சி

இது போன்ற பல திட்டங்கள் சிங்கல அரசுகளாலும் தமிழர் தரப்பு பிரதிநிதிகளாலும் (!) முன் வைக்கப் படுது.அப்பிடிஆன உங்கள் திட்டங்கலை அனுப்புங்கோ.


போட்டி விதி முறைகள்:

இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுவதற்கு வயது வரம்பு கிடையாது.

ஆர் வேண்டுமானலும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.ஆனால் கலந்து கொள்ள்பவர்களுக்கு ஏதாவது ஒரு அமைப்பு இருக்க வேண்டும்.இல்லை எனில் உடனடி அமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்களது அமைப்பில் குறைந்த பட்சம் ஒரு உறுப்பினராவது இருக்க வேண்டும்.

தீர்வுத்திட்டம் பத்து வரிகளுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும்.

-

இலங்கை சாமாதனத்திற்கு அனைத்து தரப்பினரும் பாடுபட வேணும்.