மீறல்களைப் பகிர்வோம்……

புதிய கருத்தியல்கள் எல்லாம் மீறல்களின் வெளிப்பாடே. மாறிவரும் உலகின் ஒவ்வொரு புதிய கருத்தியலும் ஏலவே இருப்பவைகள் குறித்தான அதிருப்தியின் வெளிப்பாடுகளே. ஈழத்தின் மிதவாத அரசியலை மீறி அதன் கட்டுக்களை மீறி எழுந்தததே ஆயுதப்போராட்டம். தமிழகத்தில் தேசியவாத மதநோக்கிலான சிந்தனைச் சூழலின் மீதான மீறலே பெரியாரின் திராவிடம். இந்த மீறல் இன்றைக்கல்ல பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்பு மனித இனம் தோன்றியபோதே உருவாகியது இயற்கையிடமிருந்தான ஆதிமனிதனின் மீறலே நாகரீகங்களின் தோற்றமும் வளர்ச்சியும். கலிலியோ கலிலியின் காலத்திலிருந்த மீறல் எதிர்கொண்ட அடக்குமுறையை எல்லாக்காலங்களிற்கும் பொருத்தமானதாய் இருக்கிறது என சுட்டிக்காட்டலாம். மார்க்சின் மீறலே மார்க்சியமானது . முதலாளித்துவத்துவ சூழலை மீறி எழுந்ததே கம்யூனிசம். இத்தகைய பின் புலத்திலேயே உலகின் சமூக பொருளாதார விடுதலைகளை நாம் பார்க்கலாம்.பெண்களுடைய மீறலும் கட்டுடைத்தலுமே இன்று பெண்களுக்கான போராட்டங்களாக விரிகின்றன. பல்லாயிரம் வருடங்களிற்கு முன்பிருந்தே தமிழ்ச் சூழலில் படிப்படியாக இடம்பெற்று வரும் மீறல்களை இதற்கான உதாரணங்களாக கொள்ள முடியும். ஆக ஒரு புதிய விடுதலையினதும் ஒரு புதிய கருத்தியலின் உருவாக்கத்திற்கும் மீறலே தொடக்கமாகிறது.

ஒரு ஆரோக்கியமான புரிதல்களுடன் கூடிய மீறல்களையே நாம் செய்ய விரும்புகிறோம். சமூக அநியாயங்களையும் சமூக அவலங்களையும் கட்டுடைக்க வேண்டிய காலமிது. யாரோ ஒருவனால் அவனது சில தேவைகளிற்காக உருவாக்கப்பட்ட கல்விச்சூழலில் எங்கள் மூளைகளை அடைவுவைக்கத்தொடங்கிய நாம் எம்மை ஆளுகிற யார்யாரிமோவெல்லாம் தொடாந்தும் எங்களை அடகு வைத்து விட்டு அலைகிறோம்.
இதைமீறிய ஒரு நண்பர் கூட்டத்தின் வெளிப்பாடே இந்த வலைப்பூ இது எல்லாவற்றையும் கேள்விக் குட்படுத்தும். எனவே மீறுவோம் . மீறல்களைப் பகிர்வோம்……

மீறுவது குறித்து......

உலகம் முழுவதும் பெருகும் அதிகார வர்க்கங்களின் தொடாச்சியான ஒடுக்குமுறைக்கு உட்பட்டு வரும் புறநிலை மனிதர்களின் குரலாய் அந்த மனிதாகளின் குரல்களை அவர்கள் இப்போது இருக்கிற மனிதச் சூழலின் சிறைகளில் இருந்து வரும் வேறுபாடான குரல்களை பதிவு செய்யும் ஆரம்பக்கட்ட முயற்சியாய் இந்த வலைப்பூ இருக்கும். நண்பர்களே நீங்களும் உங்கள் சிறைகளை உங்கள் கண்களுக்குள் வரும் சிறைகளை பகிர்ர்ந்து கொள்ளலாம்.......

மீறல்......

என்றைக்கும் அநீதிக்கும் உரிமைகள் மீறுவதற்கும் புறக்கணிப்பிற்கும் எதிரானதாகவும் அதன் குரலாகவும் இருக்கிறது மீறல் வலைப்பதிவு...